அன்றாட நிகழ்வின் பிரதிபலிப்பை இயல்பான மொழியில் படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். இதில் 26 கதைகள் இருக்கின்றன.
பணி ஓய்வுக்குப் பின் நடக்கும் நிகழ்வுகளை நினைவலைகளாக படம் பிடித்துக் காட்டும் ‘ஊஞ்சல்’ கதையும், அலுவலக வாழ்வுக்குப் பின் ஈகோவை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ‘புளியம் பழம்’ கதையும் உணர்வு நிலைகளை அப்பட்டமாய் அடையாளப்படுத்துகின்றன.
கதைகள் எங்கும் கலந்து நிற்கும் நகைச்சுவை கவர்ந்திழுக்கிறது. நண்பருடன் உரையாடுவது போன்ற தொனியில் உள்ளன. அனைவரும் படிக்கலாம்.
– ஊஞ்சல் பிரபு