மனிதனின் இயல்பான குணங்கள், சமூகம் குறித்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். பெண்ணின் குடும்ப பாரம் மற்றும் தினசரி உழைப்பில் இயந்திர கதியாக செயல்படுவோருக்கு ஏற்படும் சிரமங்களை மிக நுட்பமாக எடுத்துரைக்கிறது.
ஒரு கட்சி, பதவியில் அங்கம் வகித்து வரும் வேலை தேடும் இளைஞரை, எப்படி எல்லாம் பாதிக்கிறது என, ‘நகர செயலாளர்’ கதை கூறுகிறது. மகள் தாய் மீது வைக்கும் பாசம், குடும்ப சூழல், பெண் படிப்பு, திருமணம் என, ‘அம்மாவின் ஆணை’ கதை பகிர்கிறது.
மறதி மனிதனை திணற வைக்கும் என்பதை, ‘மறதி’ கதை எச்சரிக்கிறது. பயணத்தில் கிடைக்கும் அனுபவத்தை, ‘தேடினேன் நாடினேன்’ கதை அழகாக பகிர்கிறது. ஒவ்வொரு கதையும், மனித மனங்களின் இயல்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
– டி.எஸ்.ராயன்