காஷ்மீர் யாரால் எப்படி உருவானது, யாருடைய கைகளுக்கு எல்லாம் மாறியது என்பதை ஆவணப்படுத்தியுள்ள நுால்.
பெரியாறு அணை கட்டிய கர்னல் பென்னிகுயிக்கிற்கு முன்னரே, அணை கட்ட முடிவு செய்து ராமநாதபுரம் மன்னர் சேதுபதியின் அமைச்சர் முத்திருளப்ப பிள்ளை பூர்வாங்க பணியை செய்தார். போதிய நிதி வசதி இல்லாததால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது என்பதும் பதிவிடப்பட்டுள்ளது.
மைசூரு சமஸ்தானம் எப்படி கர்நாடக மாநிலமானது, ஆற்று நீர் அனைவருக்கும் சொந்தம் என்ற சர்வதேச சட்டத்தை மதிக்காமல் கர்நாடக அரசு அணைகளை கட்டியது பற்றிய வரலாற்று பின்னணி சுவாரசியமாக தரப்பட்டுள்ளது. வரலாற்று ஆவணமாக பாதுகாக்கப்பட வேண்டிய நுால்.
– ராம்