சிவகங்கை சீமையின் ஆட்சி கால வரலாற்றை விவரிக்கும் நுால். இது, கி.பி., 1730ல் மன்னர் சசிவர்ணத்தேவர் காலத்தில் உருவானதில் இருந்து துவங்குகிறது.
மன்னர் சசிவர்ணத்தேவர் முதல், மருது சகோதரர்களுக்கு பின் ஆட்சி செய்த ஜமீன்தார்கள் வரை விரிவாக எடுத்துரைக்கிறது. மன்னர்களின் வீரமும், அவர்கள் ஆட்சி செய்த விதமும், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து நடத்திய போர்களும் தத்ரூபமாக விவரிக்கப்பட்டுள்ளன.
பிற்சேர்க்கையாக தரப்பட்டுள்ள ராமநாதபுரம் சேதுபதிகள் குறித்த பட்டியல், தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர்கள் பட்டியல், சிவகங்கை ஜமீனை ஆட்சி செய்த ஜமீன்தார்கள், அரச பரம்பரை பட்டியல் மிகவும் சிறப்பாக தொகுத்து தரப்பட்டுள்ளது. சிவகங்கை சீமையின் வீரத்தை பறைசாற்றும் பொக்கிஷமாக திகழும் நுால்.
– ராம்