வாழ்க்கையை சரியான கோணத்தில் புரிந்து செயல்வடிவம் கொடுக்க தன்னம்பிக்கை ஊட்டும் நுால். கேள்வி – பதிலாக புரிய வைக்கிறது.
நன்மையும், தீமையும் அடுத்தவரால் வருவதில்லை; துன்பமும், ஆறுதலும் மற்றவர்கள் தருவதில்லை என விவரிக்கிறது. அன்பின் மொழிக்கு எல்லை இல்லை என்கிறது. அனுசரித்து போகாதவர்களை ஒதுக்கி வைப்பது சரிதானா என, கேள்வியை எழுப்புகிறது.
ஏழை, பணக்காரர் என, தனித்தனியாக பணம் அச்சிடுவதில்லை; ஒரே பணம் தான், அது கையில் இருப்பதை பொறுத்து மதிப்பு உயர்வதை கூறுகிறது.
மகிழ்ச்சி என்ற சாவியை, எப்போதும் உடம்பில் ஒட்டி வைத்திருக்க வலியுறுத்துகிறது. விருப்பு, வெறுப்பு இல்லாமல் பாராட்டும் மனம் வேண்டும் என்கிறது.
அர்த்தத்துடன் வாழ வலியுறுத்தும் நுால்.
– டி.எஸ்.ராயன்