பூஜையில் வைக்க வேண்டிய யந்திர வடிவங்கள், அவற்றின் மந்திரங்கள் பற்றி விரிவாக தரும் நுால். ராஜ யந்திரம், காயத்ரி யந்திரம் மற்றும் அட்சர யந்திரங்களும் பிரயோகங்களும் கூறப்பட்டுள்ளன.
ஸ்ரீலட்சுமி கவசம், ஆறு அட்சர வக்ர துண்ட விநாயக மந்திரப் பிரயோகம், ஒன்பது அட்சர உச்சிஷ்ட கணபதி மந்திரப் பிரயோகம், பன்னிரண்டு அட்சர உச்சிஷ்ட கணபதி மந்திரப் பிரயோகம் தரப்பட்டுள்ளன.
சரீர யந்திரத்தில் மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரை உள்ளது. மந்திர, யந்திரங்கள் பற்றிய பக்தி நுால்.