மோட்சத்தை அடைவதற்கு வழி கூறும் மார்க்கம் குறித்து விளக்கும் நுால். பிரமாணம், விவரியயம், விகற்பம், நித்திரை, ஸ்மிருதி என்ற விருத்திகள் கூறப்பட்டு உள்ளன.
ஹடயோகத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. இத்துடன், தத்துவப் பிரகாசிகையென்ற தமிழ் விருத்தியுரையும் உள்ளது. முதல் உபதேசத்தில், சுவஸ்திகாசனம் முதல், 124 ஆசனங்கள் விளக்கப்பட்டுள்ளன.
கடைப்பிடிக்கும் போது உணவு, பத்திய முறைகள் எளிமையாக கூறப்பட்டுள்ளன. பிராணாயாமம், நாடி சோதனை, ஷட் கர்மம் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.
அடுத்து, குண்டலி சர்வயோகம், மங்கலாசரணம், சாதன பக்தி பற்றியும் கூறுகிறது. ஆன்மிகத்தில் பற்றுள்ளவர்களுக்கு உகந்த நுால்.
–முனைவர் கலியன் சம்பத்து