பத்திரிகைகள் மற்றும் இணை இதழ்களில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால்.
பெண்களின் மன உணர்வை வெளிப்படுத்தும் சிந்தனையுடன் உள்ளது. அதை, ‘இந்திய பெண்கள் அறிவில், அழகில் வல்லவர்கள்தாம்; ஆனால், நெறி தவறா சிற்பங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். சமூக அக்கறையும், மனித நேயமும் கவிதைகளில் மிளிர்கிறது. ஏழை மக்களின் மன உணர்வுகளை படம் பிடிக்கிறது.
விலைவாசி ஏற்றம், கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கை பற்றி எல்லாம் பேசுகின்றன. சென்னையில் பெருமழை பெய்து பாதிப்பு ஏற்பட்டதை, ‘உசுரு மட்டும் போகவில்லை; உடுத்த துணியுடன் நிற்கிறோம்’ என துவங்கி உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.
சமூக மாற்றம் கவிதைகளின் தொகுப்பு நுால்.
– மதி