குழந்தை வளர்ப்பில் பெற்றோருக்கு உதவும் வழிகாட்டி நுால். பெண்களை, குழந்தைகளை எப்படி அணுக வேண்டும் என்பதை கற்றுத்தரும் வகையில் உள்ளது.
புத்தகத்தில் எதையும் கேள்விக்கு உட்படுத்த வேண்டும் என்ற அறிவுரையுடன் கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கேள்வியின் பலனைத் தான் இன்றைய சமூகம் வளர்ச்சியாக அனுபவித்து வருகிறது என்பதை வலியுறுத்துகிறது. ஆண்களுக்கு சில கேள்விகளை முன்வைத்து சுய பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் அறிவுரைக்கிறது.
போதைப்பழக்கம், புகை பிடிப்பது போன்றே பெண்களை தவறான கண்ணோட்டத்துடன் அணுகுவதும் கொடியது என்பதை விளக்குகிறது. குழந்தைகளை உடல், மன ரீதியாக துன்புறுத்துவதை அறவே தடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. எளிய நடையில் வழிகாட்டியாக விளங்கும் நுால்.
– ராம்