பிரபல ஆய்வறிஞர் மா.ராசமாணிக்கனார் எழுதிய புத்தகத்தின் சுருக்க வடிவமாக மலர்ந்துள்ள நுால். சோழர் வரலாற்று தகவல்கள் சுவைபட சுருக்கமாக தரப்பட்டுள்ளன.
சோழர்களின் ஆட்சி தமிழர் வரலாற்றில் முக்கியமான காலம். நாகரிகம் உயர்ந்த நிலையை அடைந்திருந்ததை இந்த புத்தகத்தில் உள்ள தகவல்கள் எடுத்துக்காட்டுகின்றன. நாட்டில் அமைதி நிலவியதால் ஏராளமான கோவில்ன் கட்டுமானப்பணிகள் நடந்தன. ஆடல் பாடல் என கலைகள் ஓங்கி வளர்ந்தன. கைத்தொழில்களும், வியாபாரமும் சிறப்புற்றது.
சோழர்களின் ஆட்சி பல பகுதிகளிலும் பரவியிருந்தது. வெளிநாடுகளிலும் விரிவு பெற்றதை எல்லாம் எடுத்துக்காட்டுகிறது. குறுந்தலைப்புகளில் கருத்துக்கள் தனித்தனியாக தொகுத்து எளிதாக புரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால்.
– மதி