ஓருநோக்கோ என்பவன் ஆப்ரிக்க வீரன். ஆங்கிலேயர் ஆட்சியில் தன் இனக்குழுவை காப்பாற்ற உதவிகளைச் செய்துள்ளான். பிற இனக்குழுக்களை அடிமைப்படுத்தியுள்ளான். ஆங்கிலேயருக்காக உழைத்தவன், ஆங்கிலேயரால் கொல்லப்படுகிறான்.
ஆப்ரா பென் என்பவர் ஆங்கிலத்தில் பதிப்பித்த நுாலின் தமிழாக்கம். புதுக்கவிதையில் இருபத்து நான்கு தலைப்புகளில் படைக்கப்பட்டுள்ளது. ஓருநோக்கோவும்; அவன் காதலியும் கிழவனால் பிரிக்கப்படுகின்றனர். அவர்களை அடிமையாக ஆங்கிலேயருக்கு விற்று விடுகிறான் கிழவன். அங்கே பட்ட இன்னல்களைக் கண்ணீர் வரும் வகையில் காவியமாக்கப்பட்டுள்ளது.
காதல் சோகம் ரசனையுடன் படைக்கப்பட்டுள்ளது. ஓருநோக்கோவின் பெயரை நிலைநாட்டும் விதமாக புதுக்கவிதையாக வழங்கப்பட்டுள்ள நுால்.
– முகிலை ராசபாண்டியன்