வனத்தில் யானைகள் வாழ்வியலை கூறும் நுால். அவலங்களையும் எடுத்துரைக்கிறது.
கட்டுமானங்கள், சாலைகள் வன விலங்குகளுக்கு பெரும் அச்சுறுத்தல் என எச்சரிக்கிறது. அரசின் கொள்கையால், தவறு செய்தவர்கள் மீது எடுக்காத நடவடிக்கையால் பாதிக்கப்படும் பழங்குடி மக்களின் துயரங்களை பகிர்கிறது.
வனத்தீயை மூட்டுவது யார் என்ற கேள்விக்கு பதில் கூறுகிறது. கரடிகளை சீண்டியதால் ஏற்பட்ட விளைவுகளை பேசுகிறது. குடியிருப்பு பகுதிகளை நோக்கி யானைகள் படையெடுப்பதன் காரணம், மனிதர்களுடன் ஏற்படும் மோதல், சேதத்தை விவரிக்கிறது.
சூழலியல் ஆர்வலர்கள், காடுகளை காக்க ஏன் போராடுகின்றனர் என, சம்பவங்கள் வாயிலாக எடுத்துரைக்கிறது. யானைகள் அழிந்தால், வனம் மட்டுமல்ல; மனிதர்களும் அழிவர் என எச்சரிக்கிறது.
-–-டி.எஸ்.ராயன்