சம காலத்தில் நடந்து வரும் பிரச்னைகளை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள ஆங்கில நாவலின் தமிழ் வடிவமாக மலர்ந்துள்ள நுால். மத வன்முறை களத்தை முன்வைத்து புனையப்பட்டுள்ளது.
சமூகத்தில் நடக்கும் அவலங்கள் கருவாக்கப்பட்டு உள்ளன. கண் முன் நடக்கும் பிரச்னைகளின் குரூரத்தை, கொடூர அடாவடித்தனத்தை மிக நுட்பமாக விவரிக்கிறது. கதையைச் சொல்லும் பாணி, கலை உணர்வுடன் மிளிர்கிறது. அலுப்பு தட்டாமல் படிக்கும் வகையில் காட்சி மயமாக உள்ளது. அனுபவங்களின் கோலமாக மலர்ந்துள்ளது.
உண்மை சம்பவங்களை, உரிய கதை மாந்தர் நடத்தை போக்கில் விட்டுள்ளது. இன்றைய காலக்கட்டத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போல் விளங்குகிறது. நிகழ்வுகளை மட்டுமின்றி, வரலாற்று போக்கையும் சித்தரிக்கும் நாவல்.
– மதி