வரலொட்டி ரெங்கசாமியின் இந்த புத்தகம் அவர் வாழ்வில் நடந்த சில சம்பவங்களின் தொகுப்பு போல் தெரிந்தாலும், அதன் பின்னணியில் ஆன்மிகத் தகவல்களைப் புறந்தள்ளி விடக்கூடாது.
புற்றுநோயால் பெண் ஒருவர் அவதிப்பட்டபோது அபிராமி அந்தாதி பாடல்களைக் கேட்க விரும்பியதாகவும், பச்சைப் புடவைக்காரி அந்தக் கோரிக்கையை கதைகளாக எழுத வைத்து நிறைவேற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அபிராமி அந்தாதியில் சில பாடல்களைத் தேர்வு செய்து, விளக்கத்தை கதை போல ஒரு சம்பவத்தை விவரித்திருக்கும் பாங்கு அருமை. பாடல் மனதில் பதிகிறதோ இல்லையோ, ஆசிரியருடைய உதாரண சம்பவம் மனதை விட்டு என்றென்றும் அகலாது. அபிராமி அந்தாதியைப் பிழிந்து பருக கொடுத்திருக்கிறார்.
-– இளங்கோவன்