அபிநயத்திலும், நாட்டியத்திலும் திறனுடைய அழகு நங்கை மணிமேகலையின் வாழ்வின் ஒரு பகுதியை விரித்துரைக்கும் நுால். அவரது வாழ்க்கையில் நடந்த துறவு, மத தொடர்புடையது அல்ல என்கிறது.
மணிமேகலைக்கு குடும்பத்தில் பிடிப்பு இல்லை; மனதுக்குப் பிடித்தவர்களும் குடும்பத்தில் இல்லை; தந்தை இறப்பு, பொருள் இழப்பதற்கு காரணமான தாய் மாதவியை வெறுத்தாள்; உள்ளத்தின் ஓரத்தில் உதயகுமாரன் மீது காதல் இருந்தாலும், சாதி ஒதுக்குதலுக்கு பயந்து காதலை துறந்து கண்ணியமாக வாழ விரும்பினாள் என்று சுட்டப்பட்டுள்ளது.
மணிமேகலையின் துறவு, வாழ்க்கை தந்த பாடமே தவிர, பவுத்தம் போதித்த ஞானம் அல்ல என நிறுவுகிறது. மணிமேகலை துறவுக்கான காரணங்களை விளக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்