தேசிய மாணவர் படை பயிற்சியாளரை மையமாக உடைய நாவல் நுால்.
வேடிக்கையான கற்பனையுடன், வியப்புடன் நகர்த்தப்பட்டுள்ளது. நீதித்துறை, காவல் துறை, கல்வித்துறையில் நேர்மை, அர்ப்பணிப்பு உணர்வின்றி அரசியல்வாதி அழுத்தத்தால் மன உளைச்சல் ஏற்படுவதாக பதிவு செய்கிறது. முறைகேடு, ஊழல் புரையோடிக் கிடப்பதை வெளிப்படுத்துகிறது.
மற்றொரு நிலையில் நவீன விமானங்கள் அணிவகுப்பு, விஞ்ஞானிகளின் ஆய்வு, இயந்திர மனிதர் உருவாக்கம், கணினியில் தரவு சேகரித்தல், நாட்டின் எல்லை பாதுகாப்புக்காக வேலி அமைப்பு என வித்தியாசம் காட்டுகிறது. வேற்றுக்கிரகவாசிகள் பற்றியும் புனைவுகள் உண்டு. சமூக அவலங்களை சித்தரிக்கும் நாவல்.
– புலவர் சு.மதியழகன்