ஆவிகள் குறித்த நம்பிக்கையை மையமாக்கி புனையப்பட்டுள்ள நாவல்.
டென்னிஸ் வீராங்கனை கிரேசி, இறுதிப் போட்டிக்குத்தேர்வானாள். அவளோடு போட்டியிடத் தேர்வானவள் மிகப்பெரிய பணக்காரர் மகள். போட்டியில் வெல்ல இயலாது என உணர்ந்த அவளின் தந்தை, விபத்தை ஏற்படுத்தி கிரேசியை கொலை செய்தார்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கதிரேசன், டென்னிஸ் விளையாட பொருளாதார வசதி இடம் கொடுக்கவில்லை. பணத் தேவைக்கு பணக்கார மாமன் மகள் உதவினாள்; அத்துடன் அவனை அடையவும் விரும்பினாள். கொலை செய்யப்பட்ட கிரேசி ஆவியாக வந்து கதிரேசனை காதலித்து, புகழின் உச்சிக்கு கொண்டு சென்றாள். விளையாட்டில் வெற்றிக்கு துணை நின்ற காதலி கிரேசியை அவன் மணந்தானா என்பதை விறுவிறுப்புடன் சொல்லும் நாவல்.
– புலவர் சு.மதியழகன்