எழுத்தாளர்கள் 50 பேரின் 50 சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொரு கதையும், எளிய மனிதர்களின் வாழ்க்கையை பேசி, வாழ்ந்த நெல்லை மண் மணம் வீச வைக்கிறது.
பாரதியின், ‘காக்காய் பார்லிமென்ட்’ கதையுடன் துவங்குகிறது. மரபுக்கும், நவீனத்துக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை, ‘பிரமனைத் தேடி’ கதை வெளிப்படுத்துகிறது. சமயம், மனித குணங்களை, ‘ஆனைத்தீ’ புரிய வைக்கிறது.
குழந்தை தொழிலாளர் வலியை, ‘அரும்பு’ கதை பகிர்கிறது. மனிதன், மண் உறவை, ‘மண் நேசம்’ நேசிக்க வைக்கிறது. பெண்ணின் தனிமையை, ‘சிறை’ விரக்தியுடன் கூறுகிறது. மனித நேயத்தை, ‘ஆயிரங்கண்ணுடையாள்’ அழுத்தமாக பதிக்கிறது. வக்கிரம், நம்பிக்கை, அன்பு, மகிழ்ச்சியை மையமாக கொண்ட தொகுப்பு நுால்.
– -டி.எஸ்.ராயன்