படிப்பில், வணிகத்தில், நடைமுறை வாழ்வில், திறனை பயன்படுத்தி உச்சம் தொடுவதற்கான வழிமுறை, ஆலோசனையை எளிய நடையில் தரும் நுால். வாழ்வதற்கான கனவை திட்டமிட்டு மாற்றும் வழிகாட்டியாக உள்ளது.
வாழ்வில் முன்னேற படிப்பு, குடும்ப பின்புலம், பொருள் வசதி என எதுவும் தடையில்லை என விளக்குகிறது. இன்று இருப்பதை விட, ஒரு அங்குலமாவது முன்னேற வேண்டும் என்ற எண்ணமே, அதற்கான முனைப்பை ஏற்படுத்தி வழிகளை உருவாக்கும் என்கிறது.
அந்த முனைப்பை செயலாக்க போதிய உழைப்பு இருந்தால் போதும்; நம்பிக்கையுடன் இலக்கை தொட்டுவிடலாம் என வலியுறுத்துகிறது. உறுதியற்ற சந்தேகம் வாழ்வில் முன் நகர்ந்து செல்வதை தடுக்கும் என்கிறது. பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கு வழிகாட்டும் நுால்.
– மதி