பண்பாடு என்ற பெயரில் பெண்கள் மீது திணிக்கப்பட்டுள்ள சுமைகளை களைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திஎழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். தனித்த அடையாளமுள்ள பாதையில் பெண்கள் பயணிக்க வேண்டியதை வலியுறுத்துகிறது. அதற்கு இடையூறாக, எந்த தடை வந்தாலும் உடைத்து எறிய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறது.
பெண்கள் மீது திணிக்கப்படும் கொடுமைக்கு எதிராக போர்க்குரல் தொடுக்கிறது. தாக்குதலின் போது, ‘மறு கன்னத்தையும் காட்டத்தான் வேண்டுமா’என துவங்கி, ‘குடிக்க தெரிந்த மனமே’ என்ற தலைப்புடன், 24 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொன்றும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைக்கு எதிராக அமைந்துள்ளது. பெண்கள் நம்பிக்கையுடன் உயர்வதற்கு கருத்துக்களை கொண்டுள்ள நுால்.
– ஒளி