ராவணன் கதையை மையமாக உடைய தோல்பாவைக் கூத்துடன் உருவாக்கப்பட்டுள்ள நாவல் நுால். உணர்ச்சிமயமான நிகழ்வுகளைச் சுற்றி இயல்பான கதைமாந்தர்கள் வந்து போவது, எளிய நடையில் சொல்லப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும், பழங்கலையான பாவைக்கூத்து தொடர்பான நுட்பமான தகவல்களும், கூத்து நடத்துவோர் பற்றிய வரலாறும் சுவைபட விளக்கப்பட்டுள்ளது.
தோல்பாவை தயாரிப்பதற்கு உரிய விளக்கமும், கூத்து நடத்தும் முறையும் விவரிக்கப்பட்டுள்ளது. பாவைக்கூத்தின் தொன்மையை எடுத்துக்காட்டும் நோக்கில், பாவை தொடர்புடைய சங்க காலப் பாடல்களின் குறிப்புடன் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளன.
மராட்டியர் ஆட்சிக் காலத்தில் தோல்பாவைக் கூத்துக் கலைஞர்களுக்கு இருந்த மதிப்பையும் அறிய தரும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு