பழந்தமிழர் வரலாற்றில் புகழ் பெற்றிருந்த நகரம் பற்றிய குறிப்புகளை எடுத்துரைக்கும் நுால். தொல் பெருமை, வாணிபம், கடற்கோள் பற்றி எல்லாம் குறிப்பிடுகிறது.
பழந்தமிழ் நாட்டில் புகழ் பெற்றிருந்தது காவிரிப் பூம்பட்டினம். சங்க காலத்தில் சோழர்களின்தலைநகராக விளங்கியது. தமிழகத்தின் முக்கிய வணிக நகரமாக இருந்தது. காவிரியின் முகத்துவாரத்தில் அமைந்திருந்தது. இது குறித்த தகவல்கள் திரட்டி தரப்பட்டுள்ளன.
சிலப்பதிகார காட்சி, தொல்லியல் ஆய்வு முடிவு, ஆழ்கடல் ஆய்வு முடிவு எல்லாம் சுருக்கமாக தரப்பட்டுள்ளன. தமிழர்களின் பழமைக்கு சான்றாக இருந்த நகர நாகரிகம் பற்றிய குறிப்புகளை சுருக்கமாக தரும் நுால்.
– ஒளி