மேற்காசியாவில் பொதுவான மதிப்பீடுகளை, தமிழக பெண் எப்படி எதிர்கொள்கிறாள் என அலசும் நுால். ஏழை, நடுத்தர மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு அந்த நாடுகள் பெரும் கனவாக இருப்பது பற்றி விளக்குகிறது.
இங்கிருந்து செல்வோர் சமத்துவமாக நடத்தப்படுகின்றனரா, சுதந்திரமாக இருக்க முடியுமா என்பதை பற்றி பேசுகிறது. அங்குள்ள வானுயர்ந்த கட்டடங்கள், வானிலை, தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் ஏராளம் தருகிறது. சுற்றுலா தலங்களின் தகவல்களை பகிர்கிறது.
ஆறு மாதம் வெயில், ஆறு மாதம் குளிர் எப்படி இருக்கும் என உணர வைக்கிறது. பாலைவன மண்ணின் கதையை கூறுகிறது. புத்தாண்டை கொண்டாடும் விதத்தை கண்முன் நிறுத்துகிறது.
துபாய் நகரம் சென்று வந்த உணர்வை ஏற்படுத்தும் நுால்.
– -டி.எஸ்.ராயன்