ராமாயணம் பற்றிய புனைவு எப்படியெல்லாம் உருமாறியுள்ளன என்பதை எடுத்துரைக்கும் நுால்.
ராமன், சீதை தொடர்பாக உருவான சிறுவர் பாடல், அம்பா பாட்டு, வில்லுப்பாட்டு, கும்மிப்பாட்டு, கூத்துகள், ஆட்டங்களின் உருமாற்றம் எல்லாம் அழகுற தொகுக்கப்பட்டுள்ளன. நாட்டுப்புறக் கதைகள் இடம்பெற்றுள்ளன.
அக்பர் ராமாயணம் என்ற பெயரில் வெளிப்படுத்தும் நிகழ்ச்சியை எடுத்துக் கூறுகிறது. ராமாயணம் தொடர்பாக வேடிக்கையான வழக்குகள், மக்களிடம் வழங்கி வந்திருப்பதை சுட்டிக் காட்டுகிறது.
இந்தியாவில் புனைவுகளுக்கு அடிப்படையாக ராமாயணம், மகாபாரதம் பெருமளவில் இருந்ததை குறிப்பிட்டுள்ளது. நுாலை தொகுத்து வகைப்படுத்திஉள்ள முறை சிறப்பாக உள்ளது.
– ராம.குருநாதன்