மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் வாழ்க்கை வரலாற்று நுால். நடுத்தர குடும்பத்தில் பிறந்து, நகராட்சிஎழுத்தராக பணி புரிந்து, பின்னர் மேற்படிப்பு படித்து, அரசியலில் நுழைந்து முதல்வரான மாற்றங்களை பட்டியலிடுகிறது.
சட்டசபையில் ஆற்றிய உரை, மக்கள் நலனை மையமாகக் கொண்டதை, இன்றைய ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என உரைக்கிறது. இலக்கியப் பங்களிப்பு, சிந்தனை வளர்க்கும் வசனங்களை திரைப்படங்களில் விதைத்தது, சர்ச்சை கருத்துகளால் சிறை தண்டனை, எழுத்து, பேச்சு என சமூக பார்வை பற்றி பேசுகிறது.
பொன்மொழிகள், சுவாரசிய நினைவுகள் என, மேடையில் வீசிய மெல்லிய தென்றலாய், நினைவலைகளை தருகிறது. அண்ணாதுரை வாழ்க்கையை விவரிக்கும் நுால்.
– டி.எஸ்.ராயன்