இலக்கண தடைகளின்றி இயற்கையை போற்றும் கவிதைகளின் தொகுப்பு நுால். முன்முடிவின்றி கருத்துகள் உள்ளன. மனதை வருடுவது போல், ‘சமுத்திரத்தை சத்தமின்றி துாக்கி பறக்கிறது மேகங்கள்’ என, மென்மையாக காட்சிகளை தருகிறது. அது போல், ‘ஆசைப்படக்கூடாது என்று ஆசைப்பட்டார் புத்தர்’ என நயமாக உரைக்கிறது.
பொருள் நிறைந்ததாக, ‘எல்லாரையும் சிந்திக்க வைக்க வேண்டுமென்று சிரிக்க மறந்துவிட்டேன்’ என சொற்கள் ஒலிக்கிறது. கொசுக்கடி பற்றி நகைச்சுவை ததும்ப, ‘தினமும் விருப்பம் ரத்த தானம் செய்கிறோம்’ என்கிறது. எளிய மொழி நடையில் மென்மையான கருத்துகளை பகிர்ந்து, உணர்வு ஊட்டுகிறது. இயற்கை சிந்தனைகளை போற்றும் நுால்.
– ராம்