தமிழக தென் மாவட்ட மக்களின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். கிராமத்து கதை சொல்லியின் நிறைவான கருத்தில் சொல்லப்பட்டுள்ளது.
ஜாதி வித்தியாசம் பார்க்காத கதாபாத்திரங்கள் ஒவ்வொரு கதையிலும் முழுமையாக நிற்கின்றன. கதாபாத்திரங்களின் முழு வாழ்க்கையும் சொல்லப்பட்டிருக்கிறது. சில கதைகளில் அடுத்த தலைமுறைகள் வரை நீள்கிறது.
கடந்த காலத்தை அசை போடுவது, சொந்த உறவுக்குள் மலரும் காதலும், சிக்கலில்லாதது போலத் தோன்றும் காதல் நிறைவேறாது போகும் போது உண்டாகும் துயரம் போன்றவற்றை விவரிக்கிறது. நம்பிக்கை துரோகம் செய்யும் தொழிலாளியை காட்டிக் கொடுக்காமல், நல்லது செய்யும் கிராம முதலாளியை அறிமுகப்படுத்துகிறது.
– ஊஞ்சல் பிரபு