அந்நிய ஆட்சியை அகற்ற முதன்மையாக போராடிய தலைவர் நேதாஜியின் பிறப்பு, வளர்ப்பு துவங்கி, வாழ்க்கையில் மேற்கொண்ட அனைத்து செயல்களையும் 20 கட்டுரைகளில் விளக்கும் வரலாற்று ஆவண நுால்.
மாணவர் தலைவராக நேதாஜி, காந்திஜியுடன் முதல் சந்திப்பு அனுபவம், சுயராஜ்ஜியக் கட்சி, வட்டமேசை மாநாடும் அதன் தோல்வியும், நேதாஜியின் மரணச் செய்தி போன்ற தலைப்புகளில் விளக்குகிறது.
ஐ.என்.ஏ., என அழைக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியது, வெள்ளையர்களுடன் போரிட்டு கதிகலங்கச் செய்தது, சுதந்திரம் பெறும் முன்பாகவே, தேசியக் கொடியை அந்தமான், நிக்கோபார் தீவுகளில் பறக்கவிட்டது என புகழ் வெளிச்சம் பாய்ச்சுகிறது. படிக்க வேண்டிய நுால்.
– பேராசிரியர் ரா.நாராயணன்