மீனவர்களின் வாழ்வியலை படம் பிடித்து காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 11 கதைகள் உள்ளன. மீன் விற்கும் பெண்களுக்கு, பேருந்து மற்றும் பொதுவெளியில் ஏற்படும் நெருக்கடியை, ‘கருவாடு’ கதை பேசுகிறது. அடுத்துள்ள, ‘நண்டு பிடிக்க போவோமா’ கதை, கடல் அலையை ரசிக்கத் துாண்டுகிறது.
நேர்ச்சை கடாவுக்கும், சிறுவனுக்கும் இடையிலான அன்பை, ‘ரத்தம்’ கதை பொழிகிறது. மீனவ பெண்களின் கல்வி கனவை பெற்றோருக்கு புரிய வைக்கிறது. ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசன கதை, வலியை ஏற்படுத்துகிறது. பெண்களை கேலி, கிண்டல் செய்யும் சில்லரைகளின் கோர முகத்தை, ‘ஒரு கை ஓசை’ கதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. மீனவ மக்களின் வலியை வெளிப்படுத்தும் நுால்.
– டி.எஸ்.ராயன்