பிரபல சினிமா இசை அமைப்பாளர் இளையராஜாவின் இளமை வாழ்க்கை சரித்திரமாக மலர்ந்துள்ள நுால். வாழ்வு போராட்டங்களை கதை போல விவரிக்கிறது.
இளையராஜாவின் சொந்த ஊர் பண்ணைபுரம். அங்கு பணி நிமித்தமாக வந்த சின்னசாமி பழக்கம் ஆகிறார். இவர் தான் பின்னாளில் பாரதிராஜா என்று புகழ் பெற்றவர். இவரது பழக்கம் தான் இளையராஜா சகோதரர்களை சென்னை வர வைக்கிறது.
முன்னேற்றம் தந்தவர்கள் தன்ராஜ் மாஸ்டர் மற்றும் கதாசிரியர் செல்வராஜ். தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் பார்வை பட்டதால் இளையராஜா ஆனார். அதுமட்டுமல்ல, முதல் நாள் ஒலிப்பதிவின் போதே மின்சாரம் ‘கட்’ ஆனது. சகுனம் சரியில்லை என்று ஒதுக்காமல் தந்த ஆதரவு தான் உச்சத்துக்கு காரணம்.
– சீத்தலைச்சாத்தன்