எழுத்து அனுபவத்தை முன்னிலைப்படுத்தும் சிறுகதை தொகுப்பு நுால். ஒரு கதையில், வாசகர்கள் மத்தியில் எழுத்தாளன் பிரபலமடைய ஊடக உதவி தேவைப்படுவதாக குறிப்பிடுகிறது. அனுபவ வாக்கு.
எழுத்து வேறு; ரசனை வேறு. குடும்பம் வேறு; வணிகம் வேறு என்பதை அழகாக எடுத்துக் காட்டுகிறது. ஆதிசங்கரர், பஜகோவிந்தம் என்ற கவிதை நுாலில், அர்த்தம் அனர்த்தம் என்ற ஸ்லோகத்திற்கு, சொந்த மகனிடம் கூட பயம் கொள்ள வேண்டிய உண்மையை சொன்னதை கதையில் காட்டுகிறது.
முதுமையும், இயலாமையும் தோல்விகளின் போது, பச்சாதாபத்துக்குள் தள்ளும் உண்மையை ஒரு கதை விவரிக்கிறது. அந்த முடிவு அதிர்ச்சி தருகிறது. தமிழ் கற்றவரை ஒதுக்கினால் என்ன மனநிலை உருவாகும் என்பதை புரிய வைக்கிறது.
– சீத்தலைச் சாத்தன்