தமிழரின் வரலாற்று கால வரிசையை தெளிவாக தொகுத்துள்ள நுால். உலகம் முழுதும் வாழும் தமிழருக்கு, பண்பாட்டு தொன்மையை எடுத்துரைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
தமிழர் நாகரிகத்தையும் மேம்பட்ட வாழ்வையும் பறைசாற்றும் சான்றுகள் கி.மு.1200ல் கிடைத்துள்ளன. அதில் இருந்து கடந்த ஆண்டு இறுதிவரையில் தமிழர் வாழும் நிலப்பரப்புகளில் முக்கிய நிகழ்வுகளை கால வரிசைப்படி வரலாற்று பூர்வமாக தருகிறது.
தமிழ் எழுத்து முறையில் ஏற்பட்ட மாற்றம், வாழ்வியல் மாற்றங்கள், நாகரிக சிறப்புகள் சுருக்கமாக புரிவதற்கு ஏற்ப குறிப்புகளாக தரப்பட்டுள்ளன. தமிழர் தொன்மையை பறைசாற்றும் வகையில் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழர் வரலாற்று தொகுப்பு நுால்.
-– ராம்