பின்னலாடை வணிக நகரமான திருப்பூரின் பண்டைய வரலாற்றை ஆய்ந்து நிறுவும் நுால். தொல்பொருள், கல்வெட்டு, செப்பேடு, சுவடிகளோடு கள ஆய்வுகள் செய்து தகவல் திரட்டப்பட்டுள்ளது.
மகாபாரதப் போரை அடிப்படையாகக் கொண்ட ஆவணங்களை முன்வைத்து விவாதிக்கிறது. செவிவழிக் கதைகளில் கூறப்பட்ட தகவல்களையும் திரட்டி ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது. மகாபாரத காலம், சங்க காலம், இடைக்காலம் என விரிவாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போர் செய்திகளை தொகுத்து சங்கப் பாடல்களில் மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. அரிதான வரலாற்றுக் குறிப்புகளோடு படங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திருப்பூர் நகர வரலாற்றை பதிவு செய்யும் ஆவணமாக உருவாக்கப்பட்டுள்ள நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு