இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஜமீன்தார்களின் நிலை பற்றி எடுத்துரைக்கும் நுால். தமிழகத்தில் இருந்த, 72 பாளையங்களை குறிப்பிடுகிறது.
ஜமீன்தார் முறை, விஜயநகர ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது. நாயக்கர் படையெடுப்பில் படை தந்து உதவ வேண்டும் என்ற கட்டுப்பாடு பற்றி கூறப்பட்டுள்ளது.
ஜமீன்தார்களின் வீழ்ச்சி, அதிகாரம், அடங்கி நடந்ததை குறிப்பிடுகிறது. ஆங்கிலேயர்கள் நடவடிக்கைகள் பற்றி குறிப்பிடுகிறது. கம்பம் பள்ளத்தாக்கில் ஜமீன்தார்கள் எவ்வாறு வாழ்ந்தனர், வீழ்ந்தனர் என்பதை விபரமாக வெளிப்படுத்துகிறது. தமிழக வரலாற்றில் ஜமீன்தார்கள் பெற்றிருந்த இடத்தை விளக்கும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்