வாழ்வில் தன்னம்பிக்கை தரும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். கவனத்தை ஈர்க்கும் வகையில், நீ தான் மாமன்னன், தோல்வி எல்லாம் தோல்வி அல்ல என்பது போன்ற துணைத் தலைப்புகளில் கருத்துக்கள் தன்னம்பிக்கை தந்து படிக்கத் துாண்டுகின்றன.
சொல்ல வந்த கருத்துக்களுக்கு வலு சேர்க்கும் விதமாக, பழந்தமிழ் புலவர் திருவள்ளுவர், கவிஞர் பாரதியார் போன்ற அறிஞர்களின் சிந்தனைகள் உரிய இடங்களில் கோர்க்கப்பட்டு உள்ளதால் சுவை கூடுகிறது. கூடவே, பொருள் மிக்க கவிதைகள் போன்ற நல்முத்துகளும் இடம் பெற்றுள்ளன. ஒரு கட்டுரையின் முடிவில், ‘அறிவெனும் ஆயுதம் ஏந்துங்கள்; அறியாமை நம்மை விட்டகலும்’ என்ற கருத்து குறிப்பிடப்பட்டுள்ளது.
மேடை பேச்சாளர்களுக்கு உதவும் வகையிலான நுால்.
– ராம்