இருபால் பிரிவினருக்கும் அங்கலட்சணப் பலன்கள் கூறும் நுால். எளிய விளக்கவுரையும் உள்ளது.
கூந்தல், முகம், கண்கள், காது, புருவம், மூக்கு, வாய், பல், கழுத்து, வயிறு, நாபி, இடை, அக்குள், தொடை, முழங்கால், கணுக்கால், விரல்கள், உள்ளங்கை, கைவிரல்கள், உடலின் மணம் என பெண்ணுக்கு சாமுத்திரிகா லட்சணங்கள் கூறப்பட்டுள்ளன.
நெற்றி, கண்கள், உதடு, பல், மூக்கு, தொப்புள், ரோமம், வயிற்றில் காணும் கோடுகள், ஆண் குறி, பாதம், கணைக்கால், கைவிரல்கள், புருவங்கள், கழுத்து, நாக்கு, தாடை என ஆண்களுக்கும் கூறப்பட்டுள்ளன. பெண்கள் முகம் பூரண சந்திரன் போலிருந்தால், செல்வச் செழிப்பும் உடையவர் என்கிறது. படிக்கச் சுவை தரும் நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து