தமிழகத்தில் பவுத்த சமயம் பரவி இருந்ததை ஆய்வு செய்து நிறுவும் தகவல்களை உடைய நுால். வரைபட விளக்கங்கள் தந்து கற்சிலைகள், கல்வெட்டு தகவல்களை சான்றாகக் காட்டுகின்றன.
தமிழகத்தில் காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம் பகுதிகளில் பவுத்த மதம் பரவியிருந்த சான்றுகள் ஏராளமாக கிடைக்கின்றன. இங்கு மட்டுமின்றி, தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் பவுத்த சமயம் பரவியிருந்ததற்கான ஆதாரங்களை தொகுத்து தருகிறது. கி.பி., 6ம் நுாற்றாண்டில் வளர்ச்சி கண்டிருந்ததை விவரிக்கிறது.
அரச்சலுார், பொதிகை மலை, மயிலாடுதுறை, கடலுார் உட்பட பல பகுதிகளில் புத்தர் சிலைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த புத்தகம், புத்தரின் திருவுருவத் தோற்றம், சிற்பங்கள் உட்பட ஆய்வு செய்திகளை தருகிறது.
– மதி