விவசாயிக்கும், மீன் வியாபார பெண்ணுக்கும் ஏற்படும் காதலை மையமாக உடைய நாவல் நுால். ஜாதி, மதம் கடந்த துணிச்சலுக்கு பெற்றோர் துணை வருவரா என ஏங்குவது, சமூக நடப்புகளை நினைவூட்டுகிறது.
அதேவேளையில், படிப்புக்கு ஏற்ற வேலைக்கு செல்ல வேண்டும் என பெற்றோரின் கனவை எப்படி கையாண்டார் என கூறுகிறது. காதல் வெற்றி பெற வேண்டும் என துடித்த பெண்ணின் ஏக்கம், உறவுகளை எதிர்கொண்ட விதத்தை பதற்றத்துடன் விவரிக்கிறது.
காதல் வாழ்வில் நண்பர்கள், உறவுகள், சில அமைப்புகளில் இருந்து வரும் இடர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதையெல்லாம் காதலர்கள் எப்படி கையாண்டனர் என கூறுகிறது. நடப்பு சமுதாயத்தை படம் பிடித்துக் காட்டி, மாற்றத்திற்கான அவசியத்தை சொல்லும் நாவல்.
– டி.எஸ்.ராயன்