நடுத்தர மக்கள் வாழ்வை காட்டும் சிறுகதை தொகுப்பு நுால். அதிகாலை தேரோட்டத்திற்குச் செல்லும் தாயின் வேண்டுதலை மையமாக உடைய, ‘வாழ்வெனும் சாராம்சம்’ கவனிக்க வைக்கிறது.
அத்தை வீட்டில் மின் தடையால் துாங்காமல் தவிக்கும் பெண், பாட்டி இருந்த காலத்தில் விளையாடி மகிழ்ந்தது, மின்சாரம் இல்லாவிட்டாலும் நிம்மதியாகத் துாங்கிய நினைவுகளை சுமந்து வரும், ‘எனக்குத் தேவையில்லை’ சிறுகதை ரசிக்கும் ரகம்.
வறுமையிலும் மகளை படிக்க வைத்த தாய், பணிக்கு சேரும் நேரத்தில் இறந்து விடுகிறாள். தொடரும் வாழ்வை, ‘நட்சத்திரம்’ கதை பேசுகிறது. பொறுமை, அன்புடன் இருக்க மற்றொரு கதை கூறுகிறது. சுவாரசியம் மிக்க நுால்.
-– முகில்குமரன்