பண்டைய தமிழ் இலக்கியத்தின் குறியீடாக விளங்கும் உ.வே.சாமிநாதையரும், தமிழ்க் கவிதை வரலாற்றை புரட்டிப் போட்ட பாரதியும் கொண்டிருந்த தொடர்பை நிரூபிக்கும் ஆவண நுால்.
இரண்டு ஆளுமைகளுக்கும் நட்பில் முரண்பாடு நிலவியதாக உலா வரும் தகவல்களை மறுக்கிறது. நட்பு நிலவியதற்கு ஆதாரப்பூர்வமான ஆவணச் செய்திகளை எடுத்துக் காட்டுகிறது. பல்வேறு ஆவணங்கள் துணையுடன் எழுதப்பட்டுள்ளது.
ஐந்து இயல்களாக அமைந்துள்ளது. ஆதாரங்களின் பின்னிணைப்பு, நான்கு பகுதிகளாக தரப்பட்டுள்ளன. தமிழக இலக்கிய வரலாற்றில் முக்கிய பங்காற்றிய இரண்டு ஆளுமைகளின் பின்னணியை தெளிவாக எடுத்துக் கூறுகிறது. வரலாற்று தகவல்களை உள்ளடக்கிய முக்கியமான ஆவணமாக வெளிவந்திருக்கும் நுால்.
– மதி