தேயிலை தோட்டத்திற்கு இடம் பெயர்ந்தவர்களின் இன்ப, துன்பங்களை கருவாகக் கொண்ட நாவல். உண்மை செய்தியாகவே பிரதிபலிக்கிறது.
பயணங்கள் வழியாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்வை அலசுகிறது. குடும்பத்தில் துவங்கி, சமூகத்தின் கதையாக விரிகிறது. தேயிலை தோட்ட குடும்பம் வாழும் சூழல், தொலைதுார கழிப்பறை, ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் என அவலங்களை கண்முன் நிறுத்துகிறது.
உழைப்பு, முயற்சி, வறுமை, கல்வி, இயற்கை சீற்றம், வனவிலங்குகளின் தாக்குதல் என, தினந்தோறும் போராட்ட வாழ்க்கை வாழ்ந்ததை கூறுகிறது. மக்களின் வழக்குச் சொற்கள், உணவு, நம்பிக்கை, பட்டப்பெயர்கள், விளையாட்டுகளை கதையின் ஊடாகச் சேர்த்திருப்பது சுவாரசியமாக உள்ளது.
– எஸ்.ராயன்