ஆண் – பெண் பேதத்திற்கு அப்பால் ஏற்றத்தாழ்வு எதுவும் இல்லை என்பதைத் தீவிரமாக எடுத்துரைக்கும் நுால். குழாயடியிலும், மாமியார் – மருமகள் நிலையிலும் சண்டை மட்டுமே நடக்கும்; அது வன்மமாகிக் கொலை என்ற கொடூரத்தை நோக்கிச் செல்வதில்லை என்ற உண்மையை தோலுரித்துக் காட்டுகிறது.
பெண்களால் இணைந்து செயல்பட இயலாது என்னும் சொல்லைப் பொடிப்பொடியாக்கிறது. குடும்பம், திருமணம் பற்றி தீவிர விமர்சனத்தை முன் வைக்கிறது. குடும்பம் அமைப்பு தான் பெண்ணுக்கு இன்னல் தரும் மையம் என்கிறது. பிரச்னைகளுக்கு இடையே வாழும் மனிதன் அடுத்த நிலைக்கு கடந்தால் அது தீர்ந்துவிடும் என எண்ணுவதை உணர்த்துகிறது. புதிய கோணத்தில் சிந்திக்க துாண்டும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்