இன்றைக்கும் மனிதனுக்கு வருகிற பிரச்னைகள் அனைத்துக்கும் காரணம் என்ன தெரியுமா?
எல்லாமும் நாம் ஆசைப்பட்டபடி நடக்க வேண்டும் என்று அடமாக இருக்கிறோம். கோவிலுக்குப் போனால் கடவுளுக்கு மிக அருகில் நிற்க வேண்டும் என்று நினைக்கிறோம். கல்யாணத்துக்குப் போனால், வரிசையில் நிற்காமல் இன்னொரு பக்கமாக மேடையேறிப் போய் மணமக்களை வாழ்த்த நினைக்கிறோம்.
நமக்கான மரியாதையை மற்றவர்கள் தராமல், நாமே எடுத்துக் கொள்ள நினைக்கிறோம். இவையெல்லாம் அத்தனை சுலபமாக அமைந்து விடுமா, என்ன... ‘எது நடக்க வேண்டுமோ, அதுவே நடக்கும்’ என்பதை விவரித்து அற்புதமான ஒரு கதையை மகா பெரியவா சொல்கிறார். அந்த அனுபவத்தை இந்த தொகுதியில் படித்துப் பாருங்கள்.
–ரவி