சனாதன தருமத்தையே அடியோடு அழிப்பது என்றால், பெற்றோரை மதித்து நடத்தல், அறவழியில் வாழ்தல், அனைவரையும் நேசித்தல், பிறருக்கு உதவுதல், கடமையைச் சரியாகச் செய்தல் போன்ற எல்லா நல்ல விஷயங்களை அழிப்பதாக பொருள்படும்.
இனிமையான வார்த்தைகளை பேச வேண்டும். இனிமையாக இருப்பதாலே பொய்யை பேசக் கூடாது. இதுதான் சனாதன தருமம். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேச்சுக்கே இடமில்லை. செயல்களில் வேறுபாடுகள் இருந்தாலும், இந்த அனைத்துத் தரப்பு மனிதர்களையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்பதே சனாதன தருமத்தின் கொள்கை. பாமர மக்களும் புரியும் வகையில் எளிய நடையில் உள்ள நுால்.
– இளங்கோவன்