மனித குலத்தை குழப்பியிருக்கும் விதி மற்றும் மதியின் நுணுக்கங்களை ஆராய்ந்து கருத்துக்களை உரைக்கும் நுால். உயிரினங்களுக்கு தேவையானவற்றை இறைவன் படைத்துள்ளான். ஆனாலும் வாழ்வில் எண்ணற்ற அவலங்கள் நிரம்பியிருக்கின்றன; இது குறித்த குழப்பம் பெரும்பாலானோருக்கு உண்டு.
விதிக்கப்பட்டவை, விதிக்கப்படுபவை, இறையும் விதியும், மதி மயக்கம், மதி இயக்கம், புற உலகு, குடும்பப் பயிர், விதைப்பு காலம், இலக்கும் இலக்கியமும் என்ற தலைப்புகளில் கருத்துக்கள் இடம் பெற்று உள்ளன. புகழ் போதை, பண போதை, குடி போதை, இணைய போதை பற்றி கூறுகிறது. இன்றைய இளைய சமுதாயத்திற்கு தக்க வழிகாட்டியாக விளங்குகிறது. வாழ்வின் உண்மைகளை தெளிவுபடுத்தும் நுால்.
-– வி.விஷ்வா