கல்லுாரி காதல் அந்தரத்தில் நிற்க வேலை தேடும் படலம். பிறகு நடந்தது ஆச்சரியம் காதலியால் கிடைத்த பதவி. இப்படி போகிறது கதை.
காதலை குடும்பச் சூழ்நிலையால் ஏற்க மறுக்கிறான் காதலன். கல்லுாரி வகுப்பில் அந்தப் பெண் தன்னை மறந்து ஏங்கியிருக்கும் போது கேள்வி எழுப்புகிறார் ஆசிரியர். உண்டு அல்லது இல்லை என்று மட்டும் சொல் என்கிறார். காதலன் வகுப்பில் இல்லை என்பதால், கிறக்கத்தில் ‘இல்லை’ என்கிறாள்.
இது சரியான பதிலாம். காதல் மயக்கமும் வெற்றி தருகிறது. நாரதர் வேலை செய்கிறான் இன்னொரு நண்பன். அந்த இடத்தில் நாரதர் படமும் போட்டு, பாடலும் எழுதப்பட்டுள்ளது. கதை பகுதியில் கவிதை துள்ளி விளையாடுவது புதிய முயற்சி.
– சீத்தலைச் சாத்தன்