காரைக்கால் அம்மையாரை முழுமையாக ஆராய்ந்து, 18 தலைப்புகளில் ஆவணப்படுத்தியுள்ள நுால். நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபு வாழ்வியல் முறை, பண்பு, கொடை பற்றிய விபரங்கள் கூறப்பட்டுள்ளன. அந்த மரபில் வந்தவர் கண்ணகி, காரைக்கால் அம்மையார், இயற்பகை நாயனார், பட்டினத்தார் என பட்டியல் இடப்பட்டுள்ளது.
தேவாரம், திருமந்திரம், திருவாசகம், சிலப்பதிகாரம், பெரியபுராணம், திரைப்பாடல் என ஆங்காங்கே மேற்கோளால் அலங்கரித்துள்ளது. பேய் வடிவம் பெற்றது புனிதவதி என்ற பெயரின் பொருள், நடராஜர் ஆடிய கூத்துகளை ஆய்வு செய்து விடை தரப்பட்டுள்ளது.
முதலில் தோன்றிய அற்புதத் திருவந்தாதி அழகுடன் விளக்கப்பட்டுள்ளது. காரைக்கால் அம்மையாரை முப்பரிமாணத்தில் காட்டும் ஆய்வு நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்