அருட்பெருங்கவிஞர் அருணகிரிநாதர் சந்தத் தமிழில் உருவாக்கிய திருப்புகழ் பாடல்களுக்கு விளக்கம் சொல்லும் நுால்.
மகளிர் உறவில் இளமை கழிய, மனம் வெறுத்து திருவண்ணாமலை வல்லாளன் கோபுரத்தில் ஏறி, விழுந்து வாழ்வை முடிக்கநினைத்தவர்.
தரையில் விழாது தாங்கி, புது வாழ்வும் புலமையும் தந்தார் முருகன். இதை தொடர்ந்து, ‘முத்தைத்தரு’ என துவங்கி பாடிய வரலாறு சுவைபட சொல்லப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழனி, சுவாமிமலை, திருத்தணி, குன்று தோராடல் என ஆறுபடை வீடுகளின் அற்புதத் திருப்புகழ் முன்னேயும், பழமுதிர்சோலை முடிவிலும் உள்ளது. தேன் சிந்தும் திருப்புகழ் பாடல்களின் தித்திக்கும் தொகுப்பு நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்