ஒழுக்கம் தவறுவதால் நடக்கும் கொலை, நேர்மை வழுவுதல், கையூட்டு, அறநெறி பிறழ்தலை தோலுரிக்கும் நாவல் நுால்.
குடும்ப நல மைய அமைப்பைத் தோற்றுவித்து பிரச்னைகள், கருத்து வேறுபாடுகள், கணவன் – மனைவி உறவு சிக்கல்களைத் தீர்த்து வைத்து நற்பணி ஆற்றுபவரை மையமாக உடைய கதை. அவரது மகள் புதுமைப் பெண்ணாக இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்று மாணவர்களுக்கு விழிப்புணர்வையும் உண்டாக்கினாள்.
உடன் படித்தவன் ஒத்த கருத்துடையவன். இருவரும் நண்பர்களாக பழகினர். அவன் காதல் வயப்படுகிறான். அது ஒரு கொலையில் முடிகிறது. உண்மையில் யார் கொலை செய்தனர் என்பதை விறுவிறுப்புடன் சொல்லும் புதினம்.
-–- புலவர் சு. மதியழகன்