குடும்ப வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை கூறியுள்ள, 15 சிறுகதைகளின் தொகுப்பு நுால். முதல் கதையே பெண்கள் தைரியமாகச் செயல்பட வேண்டும் என்பதைக் காட்டுவதாக உள்ளது.
கல்லுாரியில் படிக்கும் இளம்பெண்ணை, காதலிக்கும்படி வாலிபர் மிரட்டி வருகிறார். இதைக் கூற முடியாமல் தவித்த இளம்பெண் திட்டமிட்டு, வாலிபரை சிக்க வைக்கும் கதை சுவாரசியமாக உள்ளது.
‘அன்புக் கணவர்’ கதையில், குடும்பத்தை பொறுப்பாக கவனித்து வரும் பெண்ணுக்கு ஏற்படும் சோதனையை கடப்பது பற்றி கூறப்பட்டுள்ளது. மூதாட்டிக்கு இரு பிள்ளைகள் இருந்தும், மருமகள்களால் துன்பம் வருகிறது. அந்த மூதாட்டி எடுத்த முடிவு, ‘இரவல் உறவு’ கதையில் வித்தியாசமாகக் கூறப்பட்டுள்ளது.
– முகில்குமரன்